தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்! முள்ளிநியூஸ்

தினந்தோறும் துளசி இலை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!





துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
எனவே தினந்தோறும் ஒரு சிறு துண்டு துளசி இலையை வாயில் போட்டு மென்றால் ஆரோக்கிய வாழ்க்கை நிச்சயம்.

காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள்.

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW