வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் - விக்னேஸ்வரன் தலைமையில் தீர்மானம்

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் இன்று (07) காலை 9 மணி முதல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த கூட்டத் தொடர் , வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன், ரி.வசந்தராஜா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இதன் போது மூன்று முக்கியமான விடயங்கள் ஏகமனதான தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
வட,கிழக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும், வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பாரம்பரியமாகத் தமிழ் பேசும் மக்களின் தாய் மொழி நிலைக்கவேண்டும், அவர்களின் கலாசாரம் மேம்ப்படுத்தப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்களே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW