கிண்ணியாவில் விபத்து: அபூபக்கர் ஹம்ஷா வபாத்
கிண்ணியா-பிரதேச செயலகத்திற்கு முன்பாக துவிச்சக்கர வண்டியுடன் -மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவர் நேற்றிரவு (15) 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றைய நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-குட்டிக்கராச்சி பகுதியைச்சேர்ந்த அபூபக்கர் ஹம்ஷா (65 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதே இடத்தைச்சேர்ந்த பீ.ஆர்.பைறூஸ் (25வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW