சந்திரிக்காவை தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக வெட்டிய குழியில் மஹிந்த விழுந்தார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக வெட்டிய குழியில் மஹிந்தவே விழுந்தார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் 9/8/2016- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
கட்சியின் யாப்பில் பல விடயங்களை தனக்கு சாதகமாக அமைத்துக்கொண்ட மஹிந்த, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்குத்தான் கட்சித் தலைவர் பதவியில் இருக்க முடியுமென்ற முறையொன்றை கையாண்டார்.
இது மஹிந்தவால் சந்திரிக்காவுக்கு எதிராக வெட்டப்பட்ட குழி.அதைத்தான் இன்று அவர் அனுபவித்து வருகின்றார். இந்த முறையில்தான் தற்போது மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவராக இருக்கின்றார் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பசில் ராஜபக்ஷவை fcid யினரால் கைது செய்யப்பட்டமை தவறு, நீர்குழாய்கள் வழங்கும் நடவடிக்கை முறையாகவே நடைப்பெற்றது எனவம் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கள்ளன், திருடன் மற்றும் கொலைகாரன் போன்றோர் அரசியலில் உள்ளனர். அவர்கள் தற்போது மஹிந்த பக்கமே இருப்பதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW