எல்லலோருக்கும் ஒரே இரத்தம்: இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி முள்ளிநியூஸ்

எல்லலோருக்கும் ஒரே இரத்தம்: இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி




வெவ்வேறு ஆனாலும் சமம் ” (Different Yet Equal ) என்ற சமாதானத்தையும், சகலருக்குமான சம உரிமையுடைய வாழ்வையும் வலியுறுத்தும் அமைப்பினால் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில் நேற்று நடைபெற்றது.

“எல்லோருக்கும் ஒரே இரத்தம்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது இனவாதிகளால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.

“சிங்ஹ லே” என்ற இனவாத அமைப்பினால் இதற்கு எதிப்பு தெரிவிக்கப்பட்டதனால் சற்று குழப்பநிலை ஏற்பட்ட போதும் இனவாதத்தை எதிர்த்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களால் ஒற்றுமையாக எழுப்பப்பட்ட கோஷத்தினாலும் தொடரான முயற்சியாலும் அவை முறியடிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நிறைவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



                                                 
இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW