அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக 21 சிறுவர்கள் வழக்குத் தாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி 21 சிறுவர்களை உள்ளடக்கிய குழுவொன்று அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த வழக்குத் தாக்கல் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவெங்குமுள்ள 8வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வய
துடைய மேற்படி சிறுவர்களை உள்ளடக்கிய 'எங்கள் சிறுவர்களது அறக்கட்டளை' என்றழைக்கப்படும் மேற்படி குழு அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக ஒரேகன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
அந்த சிறுவர்கள் சட்டத்தரணி ஜூலியா ஒல்ஸனுடன் இயுஜின் பிராந்தியத்திலுள்ள நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
பராக் ஒபாமாவின் அரசாங்கம் காலநிலை மாற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறி இளம் தலை
முறையினரது உரிமைகளை மீறியுள் ளது என அந்த சிறுவர்களால் தாக்கல்
செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW