உத்தரவின்றி பதினைந்து வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்த இளைஞன் விளக்கமறியலில் முள்ளிநியூஸ்

உத்தரவின்றி பதினைந்து வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்த இளைஞன் விளக்கமறியலில்


சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி பதினைந்து வயதுடைய சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபரை இம்மாதம் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் இல்யாஸ் முஹம்மட் முபாரிஸ் உத்தரவிட்டார்.

ஆர்.பி 2,புபுதுகம,கல்லாறு, பகுதியைச் சேர்ந்த (18) வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையிலே அனுமதியின்றி வீட்டுக்குள் புகுந்து சிறுமியோடு கதைத்துக்கொண்டிருந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அவசர பொலிஸ் பிரிவுக்கு விடுத்த தகவலையடுத்து சந்தேக நபரை சனிக்கிழமை(24) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
author image
எப்.முபாரக்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW