துபாய் வங்கிக் கணக்கு விபரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மகிந்த பேச்சு – போட்டுடைத்தார் ராஜித முள்ளிநியூஸ்

துபாய் வங்கிக் கணக்கு விபரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மகிந்த பேச்சு – போட்டுடைத்தார் ராஜித


துபாய் வங்கி ஒன்றில் இருந்த கணக்குகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது பற்றி பேச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒருநாள் சந்திக்க வந்ததாகவும், அவர் வந்து சென்று ஒரு மணி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து ஜானதிபதிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், குறித்த துபாய் கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த நாட்டிடம் கோருவதற்கான கடிதத்தை எடுத்துக் கொண்டு தேவையான கையெழுத்தைப் பெறவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், அங்கிருந்து சென்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் துபாய் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறதா என தன்னிடம் வினவியதாக மைத்திரிபால சிறிசேன கூறினார் என ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW