வனப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட, மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கவும்

வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கூறுகின்றார்.
மாவில்லு, வேப்பால், மரிச்சிக்கட்டி, கரடிக்குளம், விளத்திக்குளம் மற்றும் பெரியமுரிப்பு ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.
குறித்த இடங்களில் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இந்த வர்த்தமானி அறிவித்தல் காரணடாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை சந்திக்க சென்ற அசாத் சாலி ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே இவ்வாறு கூறினார்.