எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை இப்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன.
ஆனால், எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல் நடைமுறை மிகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்துள்ளதால் ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
