நெதர்லாந்து 34 வயதுப் பெண்ணை தாக்கி கைப்பையை கொள்ளையிட்ட நபர் கைது.... முள்ளிநியூஸ்

நெதர்லாந்து 34 வயதுப் பெண்ணை தாக்கி கைப்பையை கொள்ளையிட்ட நபர் கைது....



பெண் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் உட்பட பொருட்கள் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளது. நெதர்லாந்து நாட்டு பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் கைப்பையை பறித்து சென்றதாக கூறப்படும் நபரை கைது செய்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பரகொட பிரதேசத்தை சேர்ந்த கூலி தொழில் செய்யும் 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள நெதர்லாந்து பெண் வீதியில் நடந்து சென்ற போது, காட்டு பகுதியில் மறைந்திருந்த இரண்டு பேர் பெண் தாக்கி அவரிடம் கைப்பையை பறித்து சென்றுள்ளனர்.

அதில் ஆயிரம் யூரோ நாணயம், சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான செல்போன், 6 ஆயிரம் ரூபா பணம், அழகு சாதனப் பொருட்கள் இருந்ததாக நெதர்லாந்து பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை சுற்றுலா பயணம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் குறிப்பாக பெண் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் உட்பட பொருட்கள் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW