காட்டு வெள்ளத்தில் அடிபட்டுச்சென்ற நபரை - தேடுதல் தொடருகிறது..... முள்ளிநியூஸ்

காட்டு வெள்ளத்தில் அடிபட்டுச்சென்ற நபரை - தேடுதல் தொடருகிறது.....

பெரியமுல்லையைச் சேர்ந்த முஹம்மத் சலீம் மன்சூர் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 




 வியாழக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் நீர்கொழும்பு கட்டான தொகுதிகளின் எல்லையை ஊடருத்துச் செல்லும் "தெபாஎல" பெருக்கெடுத்ததில் வெள்ளம் ஏற்பட்டு ஓடையில் நீர் வேகமாக பாய்ந்தோடுகின்றது. பெரியமுல்லை, செல்லகந்த வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு இவர் செல்லும் வழியில் பாலத்தை கடக்கும் போது வேகமாசெல்லும் வெள்ள நீருக்கு அடிபட்டுச் சென்றுள்ளார். 

 இதனை தூரத்திலிருந்த சிலர் கண்டுள்ளதாக தெரிய தருகின்றது. பொலிஸ், கடற்படை மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடாத்துகின்றனர். இதுவரையில் கண்டுபிடிக்கப்பவில்லை. 60 வயது மதிக்கத்தக்க இவருக்கு ஒரு பெண் பிள்ளையும் மூன்று ஆண்களும் உள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW