கண்டி பிரதான வீதியில் கனரக வாகனம் வேன்னுடன் மோதி விபத்து சம்பவ இடத்தில் இருவர் பலி

திருகோணமலை, கண்டி பிரதான வீதியில் கனரக வாகனம் ஒன்று வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (06) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து கிண்ணியாவுக்குச் சென்ற வேன் ஒன்றும், திருகோணமலையில் இருந்து கொழும்புக்குச் சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் கிண்ணியா பகுதியை சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவரே பலியாகியுள்ளனர்.
வேனில் பயணித்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கனரக வாகனத்தின் சாரதியும் , உதவியாளரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
-திருகோணமலை நிருபர் பாருக்-
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW


