புதையல் எடுப்பதற்காக சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக - மதுரங்குளிய பகுதியில் பதற்றம் முள்ளிநியூஸ்

புதையல் எடுப்பதற்காக சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக - மதுரங்குளிய பகுதியில் பதற்றம்

புதையல் எடுப்பதற்காக சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக - மதுரங்குளிய பகுதியில் பதற்றம்


புத்தளம் மதுரங்குளிய பிரதேசத்தில் இன்று (05) பிற்பகல் புதையல் ஒன்றை மீட்பதற்காக சிறுமியொருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, பிரதேசவாசிகள் குறித்த காணியை ஆய்வு செய்த போது, காணியில் வெட்டப்பட்ட குழியில் பெண் குழந்தையுடையது என கருதக்கூடிய சில ஆடைகள் காணப்பட்டன. புத்தளம், மதுரங்குளி கின்னவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பின்னர் இன்று காலை மதுரங்குளிய பொலிஸார் அந்த இடத்தில் இருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் அண்மைய நாட்களில் இந்த காணிக்கு அருகில் காணப்பட்ட வயோதிபப் பெண்ணொருவரும் சிறுமியொருவரும் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். 

இதனிடையே, புதையல் தோண்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழியில் நிரம்பியிருந்த தண்ணீரை அகற்றி சிறுமி குறித்த தகவல்களை தேடுவதற்கும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW