காட்டு யானை தாக்கி இருவர் பரிதாப மரணம் முள்ளிநியூஸ்

காட்டு யானை தாக்கி இருவர் பரிதாப மரணம்

காட்டு யானை தாக்கி இருவர் பரிதாப மரணம்இலங்கையில் வெவ்வேறு இரு இடங்களில் நேற்றையதினம் (21.02.2023) காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். பொலன்னறுவை மாவட்டம், வெலிக்கந்தையில் நேற்று அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்

.வெலிக்கந்தையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் வயல் காணியில் காவலுக்கு நின்ற சமயத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் வெலிக்கந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று மாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது 

வீதியைக் குறுக்காகக் கடந்து சென்ற காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த படல்கும்புரை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW