மொபைல் வீடியோ கேமுக்கு அடிமையானதால் மாணவனுக்கு ஏற்பட்ட அவலநிலை முள்ளிநியூஸ்

மொபைல் வீடியோ கேமுக்கு அடிமையானதால் மாணவனுக்கு ஏற்பட்ட அவலநிலை

மொபைல் வீடியோ கேமுக்கு அடிமையானதால்  மாணவனுக்கு ஏற்பட்ட அவலநிலை


யாழில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - வண்ணார் பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவன்

 மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்து வந்த நிலையில் (15-07-2023) வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி பல்கலைக் கழக மாணவனான 22 வயதான புஸ்பராஜா எழில்நாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 தாய் - தந்தையருக்கு ஒரே மகனான இவர் இன்றயை தினம் வீட்டில் யாரும் இல்லாது தனிமையில் இருந்தபோது இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். 

 குறித்த மாணவன் மொபைல் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையான நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 இதையடுத்து சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதரைனக்காக உத்தரவிட்டார். 

 இதையடுத்து குறித்த இளைஞனின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW