ஆற்றங்கரை மரத்தில் ஏரிசாகசம் செய்தமையால் சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம் முள்ளிநியூஸ்

ஆற்றங்கரை மரத்தில் ஏரிசாகசம் செய்தமையால் சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்

உறவினர்களான இரண்டு சிறுவர்கள் ஆற்றில் குளித்தவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஆற்றங்கரை மரத்தில் ஏரிசாகசம் செய்தமையால் சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்

 நேற்று மாலை ஸ்ரீபுர திஸ்ஸபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் 

இடம்பெற்றுள்ளது. ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய சிறுவர்கள் ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 12 வயது மற்றும் 15 வயதுடைய இருவரே உயிரிழந்தவர்களாவர். சிறுவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளதாகவும், 

இதன் போது அவர்களின் தலைகள் ஒன்றாக இடித்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஸ்ரீபுர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW