வயிற்றுவலியில் வைத்தியசாலை சென்ற 15 வயது சிறுமி கர்ப்பம் நேர்ந்தது என்ன? முள்ளிநியூஸ்

வயிற்றுவலியில் வைத்தியசாலை சென்ற 15 வயது சிறுமி கர்ப்பம் நேர்ந்தது என்ன?

வயிற்றுவலியில் வைத்தியசாலை சென்ற 15 வயது சிறுமி கர்ப்பம் நேர்ந்தது என்ன?

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை 
எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார்.

 மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15 வயதும் 9 மாதம் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவரை அவரது பெற்றோர் வைத்தியசாலையில் சம்பவதினமான 28 ஆம் திகதி வியாழக்கிழமை அனுமதித்தனர்.

 இதன்போது ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர். 

 குறித்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த கராச் ஒன்றில் வேலை செய்து வரும் 18 வயதுடைய காதலன் உடன் ஏற்பட்ட உடல்உறவு காரணமாக கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 இதனை தொடர்ந்து குறித்த இளைஞனை நேற்று 29 ஆம் திதிகதி கைது செய்த பொலிஸார் அவரை மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் இளைஞனை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


 -மட்டக்களப்பு நிருபர் சரவணன்-
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW