கோழி இறைச்சி பிரியர்களுக்கு சலுகைகளை வழங்க விலையில் மாற்றம் முள்ளிநியூஸ்

கோழி இறைச்சி பிரியர்களுக்கு சலுகைகளை வழங்க விலையில் மாற்றம்

கோழி இறைச்சி பிரியர்களுக்கு சலுகைகளை வழங்க விலையில் மாற்றம்

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1 கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

 இன்றைய தினம் (04-10-2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

 மேலும், கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 தேவைப்பட்டால் தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW