27 கிலோமீட்டரை இலக்காக கொண்டு நான்காவது நாள் ஆரம்பம்!
நிட்டம்புவையில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. நிட்டம்புவை - கிரிபத்கொடை வரையான சுமார் 27 கிலோமீட்டர் தூரம் இன்றைய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ராஜபக்ஸ அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் குடிதண்ணீர் கேட்டுப் போராடிய ரதுபஸ்வெல மக்களின் போராட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு இன்றாகும். இச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்திருந்தனர். எதிர்பாராத வகையில் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று ரதுபஸ்வெல பிரதேசத்தைக் கடந்து செல்ல நேரிட்டுள்ளது. இதேநேரம் ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக பிரதேசவாசிகளின் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் பாதயாத்திரை அப்பிரதேசத்தைக் கடந்து செல்வதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவோ, அல்லது பாதயாத்திரை கடந்து சென்றதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்தோ ரதுபஸ்வெல பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
