விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டு வந்த போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
கொழும்பு ஒல்கோட் மாவத்தையில் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
12 வருடங்கள் இராணுவ சேவையாற்றாத விசேட தேவை உடையோருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கக் கோரி இந்த போராட்டம் கடந்த 5 தினங்களாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக இராணுவத்தின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை அதிகாரிகள் உரிய பதிலை வழங்கவில்லையெனவும் குறித்த இயக்கம் தெரிவித்துள்ளது. (vir)