ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி முள்ளிநியூஸ்

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி





ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

தரமான பாஸ்மதி அரிசி – அரை கிலோ

மட்டன் எலும்புடன் – 400 கிராம்

பழுத்த தக்காளி – நான்கு

வெங்காயம் – நான்கு

பச்சை மிளகாய் – நான்கு

மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு தூள் – 2 1/2 தேக்கரண்டி

தயிர் – கால் கப்
கொத்தமல்லி தழை – அரை கைப் பிடி
புதினா இலை – கால் கைப்பிடி
எண்ணெய் – அரை டம்ளர்
நெய் – இரண்டு தேக்கரண்டி
பட்டை – இரண்டு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு – இரண்டு
ஏலக்காய் – இரண்டு

பிரிஞ்சி இலை – இரண்டு
ஷாஜீரா – அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு மேசைக்கரண்டி

பாதாம் – ஐந்து

சஃப்ரான் (குங்குமப்பூ) – ஐந்து இதழ்

செய்முறை :

* அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
* வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
* சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும்.
* மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.

* குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மட்டனை வேக விடவும்.

* இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.

* தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.

* அதன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.

* எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

* பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.

* அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.

* கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

* ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.
* சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW