திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில்-6 வயது சிறுமிமீட்கப்பட்ட சம்பவம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஜெஹதீஸ்வரன் அஜந்தா எனும் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுவன் மீண்டும் (03) மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த சிறுவனை இம்மாதம் மாதம் 17 ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்குமாறு நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 9ம் மாதம் 08ம் திகதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லையென பெற்றோர் சம்பவ தினமன்று சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைவாக பொலிஸாரும் பொது மக்களும் சேர்ந்து தேடுதல் நடாத்திய போது சிறுமி காட்டுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு மீண்டும் இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூதூர் நீதிமன்றம் 0262238291