4,000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு! முள்ளிநியூஸ்

4,000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு!

இலங்கையில்  4,000 இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் சமூக சந்தைப்படுத்தல் திட்ட முகாமையாளர் செல்வி ஜுடி தீபன் இதனை உறுதிச்செய்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, விசேட தேவையுடைய, பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் தொழில் இல்லாத இளைஞர் யுவதிகளுக்கு 04 துறைகளில் ‘சமூக சந்தைப்படுத்தல்’ திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ‘சமூக சந்தைப்படுத்தல்’ திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாடு மட்டக்களப்பு சன்றைஸ் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

கட்டுமானம், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம் திருத்துதல் ஆகியவற்றுக்காக 16 வயது முதல் 29 வயது வரையான இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படவுள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இந்த பயிற்சி திட்டத்திற்காக ஆயிரம் இளைஞர் யுவதிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களும் உறுதிப்படுத்தப்பபடும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு வாழ்வதார முயற்சியாக இத்திட்டம் அமையம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW