பருத்தித்துறையில் 42 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது – (வீடியோ) முள்ளிநியூஸ்

பருத்தித்துறையில் 42 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது – (வீடியோ)





யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ”அவ்வோலை” பிள்ளையார் கோவில் வீதி பகுதியில் சுமார் 42 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.



கைது செய்யப்பட்ட கேரளக் கஞ்சாவின் மொத்த பணப் பெறுமதி 60 இலட்சம் ரூபா என பொலிஸார் கூறினர்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த கேரளக் கஞ்சா தென்பகுதிக்கு விநியோகிக்கத் தயாராக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ். தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Links 1>>>>> video
Links 2>>>>> video

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW