​திருகோணமலையில் யுவதி ஒருவர் கொலை முள்ளிநியூஸ்

​திருகோணமலையில் யுவதி ஒருவர் கொலை

13614923_2072469902978189_5824173905600174435_n


திருகோணமலை – மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் 23 வயதான இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (8) மதியம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் பள்ளிக்குடியிருப்பு – தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

குறித்த பெண்ணின் கணவன் வெளிநாடு ஒன்றில் பணிபுரியும் அதே வேளை இவரும் திருகோணமலை பிரதேசத்தில் வேலை செய்து வந்ததாக அறிய படுக்குறது.. சம்பவ தினத்தன்று குறித்த யுவதி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாகவும் அவரது சகோதரியின் கணவன் (அத்தான்) மோட்டார் வண்டியில் அங்கு வந்ததாகவும் இரும்பு கம்பி ஒன்றினால் அவரது தலையில் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றதாகவும் அங்கு இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.. சம்பவத்துக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியாத நிலையில் குறித்த நபரை போலீசார் தேடி வருவதாக அறிய படுகிறது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW