குர்பான் பற்றி, ரிஸ்வி முப்தி

இவ்வருடத்துக்கான குர்பான் கடமையை எதுவித தடைகளுமின்றி நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பெற்றுக் கொடுக்கும் என உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
குர்பான் கால எல்லையில் மாடுகளை எடுத்துச்செல்லும் போது பொலிஸாரினால் விதிக்கப்படும் தடைகள், மாடுகள் கைப்பற்றப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்காக உலமா சபை அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. சட்டரீதியாக தேவையான ஆவணங்களுடன் போக்குவரத்து செய்யப்படும் மாடுகளுக்கு எதுவித தடைகளும் விதிக்கப்படக்கூடாது என்பதில் உலமாசபை உறுதியாக இருக்கிறது.
பொலிஸ்மா அதிபர் புதிதாக பதவியேற்றதும் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு வந்து எமது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது நாம் குர்பான் கடமையின் போது நிலவும் அசௌகரியங்களையும் பிரச்சினைகளையும் அவரிடம் எடுத்துக் கூறினோம்.
இவ்விடயம் கவனத்திற்கொள்ளப்படும் என்று அன்று அவர் எம்மிடம் உறுதியளித்துள்ளார் என்றார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW