அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர் விளக்கமறியலில் முள்ளிநியூஸ்

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர் விளக்கமறியலில்






திருகோணமலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர் ஐந்து வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நபரை அடுத்தமாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார்.

திருகோணமலை தேவநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் ஆப்போது கைது செய்யாப்பட்டு திருகோணமலை பொலிஸாரினால் வழக்கு குறித்த நபருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்தநபர் ஐந்து வழக்குத்த வணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையில் வியாழக்கிழமை (21) கைது செய்து நேற்று வெள்ளிக்கிழமை (22) பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW