சவுதியில் எதிர்ப்பில் இலங்கையர்கள்: தொழிலாளர் நீதிமன்றம் செல்ல இலங்கைத் தூதரகம் ஒத்துழைப்பு முள்ளிநியூஸ்

சவுதியில் எதிர்ப்பில் இலங்கையர்கள்: தொழிலாளர் நீதிமன்றம் செல்ல இலங்கைத் தூதரகம் ஒத்துழைப்பு





சவுதி அரேபியாவில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பணியாளர்களுக்கு தொழிலாளர் நீதிமன்றம் செல்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாமையால் 12 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 8 மாதங்களாக சம்பளம் கிடைக்காமையினால் குறித்த இலங்கையர்கள் சவுதியின் தமாம் நகரின் அல்கொபாரில் தொழிற்சாலையொன்றின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உணவைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுடன் சவுதி தூதரக அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW