திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிரதான வீதிகளில் சில கடை உரிமையாளர்களால் குப்பை கூலங்கள் மற்றும் கழிவுப் பொருட்களை பொறுப்பற்ற முறையில் வீதிகளில் கொட்டுவதால் பாதாசாரிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர். முள்ளிநியூஸ்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிரதான வீதிகளில் சில கடை உரிமையாளர்களால் குப்பை கூலங்கள் மற்றும் கழிவுப் பொருட்களை பொறுப்பற்ற முறையில் வீதிகளில் கொட்டுவதால் பாதாசாரிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.









மூதூர் பிரதேச சபைய இதை கவனிக்குமா?

மூதூர் பிரதான வீதியில் கொட்டப்படும் இக் குப்பை கூலங்களை அகற்றுவதிலும் மூதூர் பிரதேச சபை துப்பரவு செய்யும் ஊழியர்கள் இக் கழிவுகளை பாரிய சிரமங்களின் மத்தியிலேயே இதனை அகற்றி வருகின்றனர்.

இது மூதூர் பெற்றோரால் நிரப்பும் நிலைய சந்திக்கு எதிரில் உள்ள கடைக்கு முன் பகுதியில் உள்ள காட்சி தான் இது .

கடை உரிமையாளர்கள் அவர்கள் சேகரிக்கப்படும் குப்பை கூலங்கள்,மற்றும் கழிவுப் பொருட்களை வீதியில் கொட்டுவர்களுக்கு சிறு தண்டணைகளை வழங்கி ஒரு பாதுகாப்பான முறையில் பெட்டியில் வைத்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் புத்திஜீவிகள் கோருகின்றனர்.
தகவல் : Lihar Mohammed 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW