மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி வழங்கப்படும்: இலங்கை அமைச்சர் முள்ளிநியூஸ்

மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி வழங்கப்படும்: இலங்கை அமைச்சர்





தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி வழங்கப்படும் என இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை அமைச்சர் சாமிநாதன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து பிழை செய்வதால் கைது செய்யப்படுவதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியர்களை விடுவிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சாமிநாதன் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் சென்னையில் இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW