கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் பள்ளிவாசல்களில் பிரார்த்தனை
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றிரவு இந்துக்கோயில்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரைக்கு ஆசீர்வாதம் பெறும் நோக்கில் இந்தப் பிரார்த்தனை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது முதலில் தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொல்லுரே ஆகியோர் தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி இந்துக் கோயில், மீரா மக்காம் பள்ளிவாசல் ஆகியவற்றில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து கிறித்தவ தேவாலயத்திலும் விசேட ஆராதனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று காலையிலும் பாதயாத்திரைக்கு முன்னதாக கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டு நிகழ்வொன்றில் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

(file image)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW