பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனை பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர், மூன்று மாத காலத்திற்குள் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை கோரி நேர்முகத் தேர்வுகளை நடாத்துமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் முதல் தடவையாக இவ்வாறு ஒரே தடவையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி முதல் பொலிஸ் உப பரிசோதகர் பதவி வரையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
சேவைக்காலம் மற்றும் திறமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதுடன், மாகாண மட்டத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதனால் விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட முடியும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW