இலங்கையில் புதிய கசினோக்களுக்கு அனுமதியில்லை: ரணில்

தமது ஆட்சியின் கீழ் இலங்கையில் புதிய கசினோக்களுக்கு இடமளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
சிங்கப்பூர் சென்றிருக்கும் அவர் அங்கு வர்த்தகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து இது குறித்து பேசியதோடு தமது தேர்தல் வாக்குறுதகளுள் அதுவும் ஒன்றெனவும் புதிய கசினோ முதலீடுகளுக்கு இலங்கiயில் இடமில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.