இலங்கை முஸ்லிம்களின், பாரிய தவறு..!

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-
மொரோகோவிலிருந்தும் யெமன் ஹழ்ரமௌதிலிருந்தும் வந்த சில வியாபாரிகளால் அன்று இலங்கையில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து அதன் எண்ணிக்கை இன்று இருபது லட்சத்தையும் தாண்டியுள்ளது
ஆனால் இன்று பல இயக்கங்கள் , ஜமாஅத்துக்கள் , தஃவா நிறுவனங்கள் , சங்கங்கள் , அமைப்புக்கள் , ஒன்றியங்கள் பல ஆயிரம் பள்ளிவாசல்கள் , பாடசாலைகள் மத்ரஸாக்கள் , பல்லாயிரம் உலமாக்கள் , ஆசிரியர்கள் , துறை சார் நிபுணர்கள் , என்று விரிவடைந்த இலங்கை முஸ்லிம்களுக்கு கேவலம் பிரமத சகோதரர்களுக்கு ஹலால் என்றால் என்ன ? ஹராம் என்றால் என்ன ? என்ற வாழ்வின் சிறியதொரு முக்கிய அம்சத்தைக் கூட தெளிவுபடுத்த மறந்து போய்விட்டது
ஒழுக்க விழுமியங்களை அணிகலனாகக் கொண்டு செய்யும் தொழிலை இஸ்லாமிய முறைப்படி செய்தாலே இஸ்லாம் தானாக இந்த பூமியில் மலரும் என்பதை மொரோகோவிலிருந்தும் யெமனிலிருந்தும் வந்த சில வியாபாரிகள் செய்து காட்டினர்
தற்போதைய இலங்கைச் சோனகர்கள் என்ற அவர்களின் சந்ததியினர் பிற மத சகோதரர்களுக்கு சொல்லவேண்டியதை இத்தனை இஸ்லாமிய அமைப்புக்களும் இஸ்லாத்தின் உறுப்பினர்களும் இருந்தும் கூட வாழ்க்கையால் அல்ல வாயால் கூட சொல்லத் தவறிவிட்டனர் என்பதே கவலைக்குரிய விடயம்
குறிப்பு : ஹிஜாஸிலிருந்தும் மேலும் அப்பாஸிய ஆட்சியின் போதும் ஒரு சில ஆத்மஞானிகளும் இலங்கைக்கு மத போதனைக்காக வந்துள்ளனர் என்பதும் வரலாற்று சுவடுகளில் உண்டு. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW