கெக்கிராவ இளைஞர் சவுதியில் கொலை முள்ளிநியூஸ்

கெக்கிராவ இளைஞர் சவுதியில் கொலை




பணி நிமித்தம் சவுதி அரேபியா சென்றிருந்த, கெக்கிராவ, ஹோராப்போள கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சிஹாப்தீன் சிஹாம் என்பவர் சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் கொலையான சம்பவம் இடம்பெற்றுள்ளது

கண்ணாடி விற்பனை நிலையத்தில் பணி புரிந்த குறித்த இளைஞர் அங்கு பணி புரிந்த யெமன் நாட்டைச் சேர்ந்த சக தொழிலாளி ஒருவரினாலேயே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவருக்குமிடையில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியே இக்கொலை இடம்பெற்றிருக்கின்ற அதேவேளை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW