ஜாகீர் நாயக் விவகாரம் - இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுபட்டு போராட்டத்திற்கு ஏற்பாடு முள்ளிநியூஸ்

ஜாகீர் நாயக் விவகாரம் - இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றுபட்டு போராட்டத்திற்கு ஏற்பாடு





சென்னையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று (11-07-2016) சென்னையில் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.

இதில் டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து 16-07-16 அன்று சனிக்கிழமை காலை10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான், மாநில மக்கள் தொடர்புத்துறை அதிகாரி அப்துல் ரஜாக், SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி மற்றும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள்மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW