புத்தளம் சொப்பிங் கொம்ப்ளெக்ஸ் அருகில் விசேட அதிரடிப்படையினர் கடும் சோதனை..!! WP இலக்கமுடைய வாகனம் முள்ளிநியூஸ்

புத்தளம் சொப்பிங் கொம்ப்ளெக்ஸ் அருகில் விசேட அதிரடிப்படையினர் கடும் சோதனை..!! WP இலக்கமுடைய வாகனம்



புத்தளம் நகரின் மத்திய பகுதியான புத்தளம் சொப்பிங் மார்க்கெட்டின் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை விஷேட அதிரடிப்படை வீரர்கள் கடும் சோதனைக்குள்ளாக்கியதாக சற்று முன்னர் கிடைத்த செய்திகள் கூறுகின்றன.

நள்ளிரவு 12 அளவிலேயே இந்த சோதனை நடந்ததாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.



WP எனப்படும் இலக்கத்தகடை பொருத்திய வாகனமொன்றே சொதனைக்குல்லாக்கபப்ட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. குருநாகல் வீதியில் வேகமாக வந்த வாகனம் விஷேட அதிரடிப்படைவீரர்களால் நிறுத்தப்பட்டு, மக்தூன் ஹோட்டலுக்கு அருகில் உள்ள வாகனத் தரிப்பிடத்திற்கு கொண்டு சென்றே இந்த சோதனை இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் முஸ்லிம்கள் என்றும், அவர்கள் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பின்னர் சுமார் 50 நிமிடங்கள் வரை இந்த கடும் சோதனை இடம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் இந்த சோதனை முடிந்த பின்னர் வாகனத்தை செல்ல அனுமதித்த விஷேட தரடிப்படையினர் சற்று தாமதத்திற்குப் பின்னர் மன்னார் வீதியில் வேகமாக சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வாகனம் எங்கிருந்து வந்தது..? வாகனத்தில் இருந்த முஸ்லிம்கள் எப்பகுதியை சேர்ந்தவர்கள் ..? வாகனத்தில் இருந்து ஏதும் கைப்பற்றப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. கொடுக்கபட்ட தகவல்களை வைத்தே இந்த சோதனை நடந்திருக்கும் என அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சோதனையின் போது கணிசமான அளவு பொது மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW