யாழ் மீனவர்களுக்கு அடிக்கும் 'லக்'... தினமும் 30 000 ரூபா வரை வருமானம்.

பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் கட்டப்பாரை மீன் வகைகளை தற்போது அதிகமாக பிடித்து வருகின்றனர்.
.
மீன்வகையினங்களுக்கு பாசையூர் குருநகர் யாழ் புறநகர் பகுதிகளில் அதிக கிராக்கி நிலவுகிறது.
.
நெடுந்தீவு இபருத்திதுறை பகுதிகளில் அடிக்கடி கட்டாப்பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
.
கட்டா பாரையுடன் அறக்குளா பாரை போன்ற மீன்களும் சிறிய அளவில் பிடிக்கப்படுகின்றன.
.
மீன்கள் பெருமளவு பிடிக்கப்பட்ட போதும் அவற்றை மீனவர்கள் தனிப்பட்ட வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதிலேயே குறியாக உள்ளனர்.
குறித்த மீனினம் அரியவகையாகக் காணப்பட்டாலும் காலத்திற்கு ஏற்ப தற்போது அதிகம் கிடைக்கின்றன.
.
ஒரு பெரிய கட்டப்பரையின் நிறை ஐந்து கிலோ முதல் அதற்கு உட்பட்டும் காணப்படுகின்றது. ஒரு கிலோ கட்டப்பரை மீனின் விலை 1000 ரூபாவாக விற்கப்படுகின்றது.
.
25 000 ரூபா முதல் 30 000 ரூபா வரை ஒருநாள் வியாபாரத்தில் மீனவர்களிற்கு வருமானமாகக் கிடைக்கப்பெறுகின்றது.
.
இந்த மீன் வகையைப் பலரும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து செல்கின்றனர்.
.
குறித்த மீனினம் அதிகமாகப் பிடிபடுவதனால் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கைக்குச் சந்தைப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
.
மேலும் தனிப்பட்ட வியாபாரிகள் பிடிக்கப்படும் மீன்களை மொத்தமாகப் கொள்வனவு செய்து வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதால் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகின்றது.
அத்துடன் பிடிபடும் மீன்களை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW