ரூ.5000 டிவிக்கு ரூ.7000 வரியா? டென்ஷனான நபர் செய்த காரியம்
மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த டிவிக்கு அதன் விலையை விட அதிகமாக வரி கேட்டதால் டென்ஷனான நபர் டிவியை உடைத்தார், இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த முருகேஷன் என்பவர் துபாயில் கூழித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவர் தனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக மலிவு விலையில் ஒரு எல்சிடி டிவியை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தவரை, விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்தனர்.
எல்சிடி டிவிக்கு 7 ஆயிரம் ரூபாய் வரி என கூறியுள்ளனர், இதற்கு பதிலளித்த முருகேஷன், டிவி விலையோ 5 ஆயிரம் தான் இதற்கு ஏன் 7 ஆயிரம் ரூபாய் வரி கேட்கிறீர்கள்? என்னிடம் 2 ஆயிரம் மட்டும் தான் உள்ளது என கெஞ்சி கேட்ட போதும் அதிகாரி கேட்கவில்லை.
இதனால் தான் கொண்டுவந்த டிவியை அங்கேயே உடைத்துவிட்டு மனவேதனையுடன் வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து மதுரை சமூக ஆர்வலர் செரிப் கூறியதாவது, வெளிநாடு சென்று வீடு திரும்பும் போது கொண்டு வரும் பொருட்களுக்கு அதிக தொகை வசூலிப்பது போன்ற கெடுபிடிகளால் குடும்பத்தினர் ஆசைப்படும் பொருள்களை வாங்கி கொண்டுவர முடியவில்லை. தற்போது முருகேஷன் விடயத்திலும் அது தான் நடந்துள்ளது. அதிக வரி கேட்டதால் தான் டிவியை உடைத்துவிட்டு சென்றுள்ளார் என செரிப் கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த விமான நிலைய அதிகாரி விதிப்படி தான் டிவிக்கு வரி செலுத்துமாறு கூறினோம். மேலும் முருகேஷன் டிவியை கை தவறி தான் கீழே போட்டார். இது பற்றி அவரே எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW