ஜும்மா பள்ளிவாசலின் அலாவுட்டீன் அகொம்ஜி இமாம் சுட்டுக்கொலை!!
இமாம் சுட்டுக்கொலை!!
அமெரிக்க தலைநகர் நியுயோர்க்'கில்
அல்-புஃர்கான் ஜும்மா பள்ளிவாசலின் இமாம் அலாவுட்டீன் அகொம்ஜி என்பவர் பள்ளிவாசலுக்கு சென்று வீடு திரும்பும் வேளை மர்ம நபரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஓசோன்பார்க் அருகில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இவருடன் சென்ற இவரது உதவியாளரான 64 வயதுடைய மற்றொருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பகுதில் பதற்றநிலை தோன்றியுள்ளது!
குறித்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அப்பள்ளிவாயல் வளாகத்தில் உடனடியாக ஒன்று கூடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தபடி உள்ளனர்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இந்நிலையில் முதன்முதலாக அங்கு இமாம் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது!
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW