யார் என்ன சொன்னாலும் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – நல்லாட்சி அமைச்சர் கயந்த
யார் எந்த விளக்கங்களைக் கூறினாலும் இலங்கையில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமைவழங்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இதனை நல்லாட்சியின் பிரதமரும், ஜனாதிபதியும் திரும்ப திரும்ப வலியுறுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பேர்தே அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநாட்டின் உயிர்நாடி மகா சங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், பௌத்தமதத்தை பாதுகாக்க, வளர்க்க மகா சங்கம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளைமுன்னெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW