கேரள கஞ்சாவுடன் பேசாலையில் இளைஞன் கைது! முள்ளிநியூஸ்

கேரள கஞ்சாவுடன் பேசாலையில் இளைஞன் கைது!


       


மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரளக்கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவரை நேற்று புதன் கிழமை இரவு பேசாலை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 7 பொதிகளைக்கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் அதன் நிறை 14 கிலோ 550 மில்லி கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சா பொதிகள் 14 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என தெரியவந்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸார்,

பேசாலை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் சசிக்குமார் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் ஆலோசனையின் பேரில் நேற்று இரவு 10.30 மணியளவில் பேசாலை 1 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் இரகசிய தேடுதல்களை மேற்கொண்ட போது குறித்த கஞ்சாப்பொதிளை விற்பனைக்காக கொண்டு வந்த இளைஞரை கைது செய்ததோடு, குறித்த கஞ்சாப்பொதிகளையும் மீட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




                                           இதனை நண்பர்களுடன் பகிரவும்.




செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW