சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் விஹாரைகள் அமைக்கப்படுவதனை எதிர்க்கவில்லை: சிவமோகன்

சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் விஹாரைகள் அமைக்கப்படுவதனை எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கில் சிங்கள மக்கள் வாழும் மற்றும் வதியும் பகுதிகளில் பௌத்த விஹாரைகள் அமைக்கப்படுவதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடவில்லை.
சிங்கள மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்கள் வாழும் இடங்களில் பள்ளிவாசல்களை அமைப்பதற்கும் தடையில்லை.
அனைவரும் தங்களது மதங்களை வழிபாடு செய்யும் சுதந்திரம் காணப்படுகின்றது.
எனினும் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் விஹாரைகள் அமைக்கப்படும் போது மக்களுக்கு அது பிரச்சினையாக மாற்றமடைகின்றது.
விஹாரைகளை இராணுவத்தினரே அமைக்கின்றார்கள். வடக்கில் அனைத்து மதங்களுக்கும் சொந்தமான புனித தளங்கள் காணப்படுகின்றன.
நாம் அவ்வாறான இடங்கள் தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை.
நாகதீபம் என்பதனை நாம் நைனா தீவு என்றே அழைக்கின்றோம். காலத்துடன் இங்கு பல கலாச்சார மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றாலும் அது பௌத்தர்களுக்கான ஓர் முக்கியமான இடமாகவே நாம் கருதுகின்றோம். அவ்வாறு எதிர்த்தோம் என்றால் அது பிழையானதேயாகும்.
அரசியல் அமைப்பு மாற்றத்தை நாம் சாதகமான கோணத்திலேயே நோக்குகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW