காலியில் கண்ணீர் வரவழைக்கும் சம்பவம். முள்ளிநியூஸ்

காலியில் கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்.


பிரசவத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த தாய் பஸ் ஒன்றுக்கு மோதி உயிரிழந்த நிலையில் குழந்தை பாதுகாப்பாக பெற்றெடுக்கப்பட்ட சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு பிள்ளையின் தாய் என்று கூறப்படும் குறித்த கார்ப்பிணித் தாய் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக தனது கணவருடன், முச்சக்கர வண்டியில் காலி, மஹமோதரை வைத்தியசாலைக்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 8.45 மணியளவில் காலி சுமுது மாவத்தையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றவுடன் பஸ் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதுடன், கர்ப்பிணித் தாயை முச்சக்கரவண்டியின் சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதன்போது சீஸர் முறைப்படி குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்களால் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஊருகஸ்மன்ஹந்திய, வடக்கு மாகல பிரதேசத்தைல் வசிக்கும் 25 வயதுடைய 8 வயது குழந்தை ஒன்றின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், குறித்த தம்பதியினர் வெலிகம பிரதேசத்தில் கறுவா தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
                                இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW