மாணவனுக்கு ஆபாச படங்ளை காட்டியவர் கைது!

பாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பளை பேரூந்து நிலைய பிரதேசத்தில் உள்ள வியாபார கடை ஒன்றின் மேல் மாடியில் வைத்து 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு தனது தொலைபேசி ஊடாக ஆபாச படங்களை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தினை அவதானித்த சிலர் பொலிஸார்க்கு வழங்கிய ரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று தொலைபேசியை கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
பாடசாலை மாணவன் குறித்த நபர்க்கு மருமகன் முறையென பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரனையின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கம்பளை திமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW