குழந்தை பிறப்பதாக குறிக்கப்பட்ட, தினத்துக்குமுன் சத்திரசிகிச்சை - வைத்தியர்களுக்கு எதிராக முறைப்பாடு

கட்டானை திசாகே வத்தைப் பிரதேசத்தில் வசிக்கும் ஜயந்த பிரியதர்ஸன என்பவரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.
சிசு பிறப்பதாகக் குறிக்கப்பட்ட தினத்துக்கு முன்னதாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாகவே சிசு உயிரிழந்துள்ளதாக, அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச, இது தொடர்பாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று, ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டார்.
சிசுவின் பிரேத பரிசோதனையை, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிலேயே மேற்கொண்டால் தனக்கு அசாதாரணம் ஏற்படும் என முறைப்பாட்டாளர் (தந்தை) தெரிவித்தார்.
இதன் காரணமாக, றாகமை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையை, மன்றில் சமர்ப்பிக்குமாறு, கட்டானைப் பொலிஸாருக்கு, நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டார்.