நிறைவேற்றப்பட்ட தகவலறியும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து! முள்ளிநியூஸ்

நிறைவேற்றப்பட்ட தகவலறியும் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலறியும் சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார் என வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த யூன் மாதம் 24ம் திகதி தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நிறைவேற்றப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக ஊடக சுதந்திரமும், தகவல்களை இலகுவாகப் பெறமுடியும் என்றும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றாலும், உண்மையான தகவல்களும், உடனடித்தகவல்களும் கிடைக்குமா?என விமர்சனங்கள் எழுந்திருந்தின.

எனினும் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் அச்சட்ட மூலத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                            இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW