மரணத்திலும் பிரியாத தோழிகள் - தீ முட்டி தற்கொலை முள்ளிநியூஸ்

மரணத்திலும் பிரியாத தோழிகள் - தீ முட்டி தற்கொலை

பதுளை - பிட்மாதுரை, ரோபரி தோட்டத்தில் இரு யுவதிகள் தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக


பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்டுள்ள இரு யுவதிகளும் ஒரே வகுப்பில் கல்வி பயிலும் நல்ல தோழிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களின் ஒரு யுவதியின் காதல் விவகாரம் தொடர்பாக தந்தை கடுமையாக கண்டித்துள்ளதாகவும், இதை தாங்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் செல்வகுமார் காஞ்சனா மற்றும் பரமேஸ்வரன் அருட்செல்வி என்ற யுவதிகளே பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.                                                  
                                    இதனை நண்பர்களுடன் பகிரவும்.



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW