ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன் ரௌடிக் கும்பலால் தாக்கப்பட்டார்..!! இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வார்த்தைகளை பிரயோகித்தவாறு தாக்கினார்கள் முள்ளிநியூஸ்

ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன் ரௌடிக் கும்பலால் தாக்கப்பட்டார்..!! இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வார்த்தைகளை பிரயோகித்தவாறு தாக்கினார்கள்

சுயாதீன ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன் இனம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகி கராப்பிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி, தலபிட்டிய அப்துல் வஹாப் மாவத்தையில் வைத்து குறித்த ஊடகவியலாளரும் அவரது சகோததரரும் தாக்கப்பட்ட நிலையில் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள் மற்றும் தடி ஆகிய ஆயுதங்களுடன் வந்த கும்பல் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வார்த்தைகளை பிரயோகித்து இவர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேவேளை, தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை என தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் உள்நாட்டு பிபிசி உட்பட மேலும் பல இணைய ஊடகங்களுக்கு சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நு)


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW